தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று. அதனை தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றியைக் கண்ட உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று அமைச்சர்கள் பரிசீலித்து வரும் நிலையில் அவருக்கு முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.