தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 என எழுதப்பட்டிருந்தது. இதனைக்கண்டு வாக்களிக்க சென்ற பொதுமக்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 என எழுதப்படுவதற்கு பதிலாக ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 என எழுதப்பட்டிருந்துள்ளது.
இதனால் குழப்பமடைந்த பொதுமக்கள் தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவே இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த வாக்குச்சாவடிகளில் பல முக்கிய பிரபலங்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் போன வருடம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்திய அட்டைப் பெட்டிகளை இந்த வருடமும் எடுத்துவந்து பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறு பயன்படுத்தியது தவறில்லை என்றாலும் அதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்ற வாசகத்தை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி ஒட்டியிருந்தாலே இந்த குழப்பம் வந்திருக்காது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.