வாக்குச்சாவடியில் நகை மதிப்பீட்டாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செந்தமிழ் நகரில் மகேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபு மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று மேல் ஆடை இன்றி வாசகங்கள் அடங்கிய பதாகை உடன் நகை மதிப்பீட்டாளருக்கு நிரந்தர பணியை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மற்றும் தாசில்தார் மைதலி ஆகியோர் மகேஷ் பாபுவிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மகேஷ் பாபு தனது வாக்கினை செலுத்தி விட்டு சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.