Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… முழு ராசிபலன் இதோ.!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். தாராள அளவில் பணவரவு இருக்கும். மாமன் மைத்துனருக்கு உதவிகளைச் செய்வீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முயற்சிகளை  மேற்கொள்வீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். உறவினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் சிறப்பாக தான் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று சமூக நிகழ்வு கவலையை கொஞ்சம் தரலாம். தொழில் வியாபாரத்தில் குளறுபடியை தாமதமின்றி சரிசெய்யவும். அளவான பணவரவு கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். வாக்கு வன்மையால் எதையும் சாதித்துக் கொள்வீர்கள்.

புதிய பதவி புதிய பொறுப்புகள் இன்று தேடி வரக்கூடும். மேலிடம் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று புத்தி சாதுர்யத்துடன் நடந்துகொண்டு காரியங்களை மிகவும் சிறப்பாகச் செய்வீர்கள். அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களிடம் அதிக அன்பு பாசம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவை தாராள பணச் செலவில் நிறைவேறும். இன்று எதில் கையெழுத்து போடுவதாக  இருந்தாலும் கவனமாக இருங்கள். எழுத்து வகையில் கொஞ்சம் சிக்காமல் இருப்பது ரொம்ப நல்லது.

கூட்டுத் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் நண்பருடன் சுமுகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை நிதானத்தை மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ரொம்ப நல்லாகவே இருக்கும். ஓய்வான சூழ்நிலையும் இன்று காணப்படும்.

வெளியூர் பயணம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உங்களை புகழ்ந்து பேசி சொந்த காரியம் சாதிக்க முயற்சிகளை மேற்கொள்வார்கள். தொழில் வியாபாரம் அதிக உழைப்பால் வளர்ச்சியைக் கொடுக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். இன்று கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. உறவினர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதற்கு முன் ஆலோசனை செய்து கொள்வது ரொம்ப சிறப்பு. இன்றையநாள் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும்.

எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! நீங்கள் நண்பர்களுக்காக பரிந்து பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணம் வரவுக்கு ஏற்ப இருக்கும். ஆனால் வரவு இருந்தாலும் செலவு கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். செலவை மட்டும் நீங்கள் திட்டமிட்டு செய்யுங்கள். சுற்றுப்புற சூழ்நிலையின் காரணமாக நித்திரை கொஞ்சம் பாதிக்கப்படலாம், கவனத்தில் கொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடி ஏற்படலாம். எச்சரிகை இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வெளியூர் தங்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவருடன் கவனமாக பேசுவது ரொம்ப நல்லது. இன்று கூடுமானவரை கொஞ்சம் பொறுமையை கடைபிடியுங்கள். ஆனால் நண்பரிடம் பேசும்பொழுது ரொம்ப கவனமாக பேச வேண்டும்.

வாக்குவாதங்கள் ஏதுமில்லாமல் பேசுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :  ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம்பெரும். ஆதாய பண வருமானம் கிடைக்கும். விரும்பும் பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவர பயண திட்டம்  உருவாகும். இன்று செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். மன மகிழ்ச்சி உண்டாகும். உங்களை நாடி வருபவர்களை நன்கு உபசரித்து வேண்டிய உதவிகளையும் நீங்கள் செய்வீர்கள்.

பணத் தேவை ஓரளவு பூர்த்தியாகும். இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு சிறப்பாகவே வந்து சேரும். கவலை வேண்டாம் வாகன யோகம் இருக்கும். வாகனம் மூலமும் உங்களுக்கு லாபம் இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று காரியங்களில்  ரொம்ப சிறப்பாகவே செயல்படுவிர்கள். உங்கள் செயல்திறனை கண்டு மற்றவர்கள் உங்களை பாராட்டக்கூடும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் ஏற்படும்.  கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட நாளாக இருந்து வந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். அரசாங்கம் மூலம் லாபம் இருக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் சாதகமாகத்தான் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாக தான் காணப்படும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மட்டும் கவனமாக செயல்படுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது  சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே…!!  இன்று முக்கியமான பணி ஓன்று அவசரகதிக்கு மாறலாம். தொழில் வியாபார இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். நேரத்துக்கு உன்பதால் உடல் நலம் சீராக இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும்.

அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாகவே செய்து முடிப்பீகள். புத்தி சாதுர்யத்துடன் நடந்துகொண்டு நன்மை அடைவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்றைய நாள் உங்களுக்கு கொஞ்சம் சிறப்பானதாக இருக்கும். ஆலயம் சென்று வாருங்கள், அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

 

தனுசு ராசி  அன்பர்களே…!!  சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்யக்கூடும். சுய முயற்சியால் பணி நிறைவு ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சி சுமாரான அளவில்தான் இருக்கும். பணச் செலவில் சிக்கனத்தை மேற்கொள்வது சிறப்பு. உணவு பொருளை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் பொழுது யோசித்து செயல்படுவது ரொம்ப நல்லது.

வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். செலவு கொஞ்சம் கட்டுக்குள் இருக்கும்.  பிரச்சனைகள் ஓரளவு சரியாகும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுப்பதாக இருக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் தயவுசெய்து ஏற்க்காமல் இருப்பது ரொம்ப நல்லது.  வழக்கத்தை விட கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். பொருள் வரவுக்கூடும்.  பயணம் செல்ல நேரிடும். பயணம் ஓரளவுக்கு வெற்றிகரமாக அமையும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிறம்

மகரம் ராசி அன்பர்களே…!!  இன்று ஞாபகசக்தி சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் குறுக்கிடும் சிரமம் வெல்லும் திறன் இருக்கும். தொழில் வியாபார வளர்ச்சி பணி இனிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். அன்புக்குரியவர்க பரிசுகள் கொடுப்பார்கள். இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.

புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப சிறப்பு. காரியத்தில் அனுகூலமும் இருக்கும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மையும் கிடைக்கும். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லை சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

 

கும்பம் ராசி அன்பர்களே…!!  உங்கள் மனம் செயலில் புத்துணர்ச்சி பிறக்கும். தொழில் வியாபார நடைமுறை திருப்திகரமாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக  பொருட்களை வாங்கக்கூடும். இன்று ஞாபகத்திறன் அதிகரிக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கவனமாகவே நீங்கள் செயல்படுத்துவது நல்லது.

குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிலும் நிதானமாக ஈடுபட்டு மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்துமுடிப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு இன்று அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செய்த்தொழிலில் கூட நல்ல முன்னேற்றம் இருக்கும். தனவரவிற்கு எந்த குறையும் இல்லை.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவதால் பல நலமும் பெறலாம். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில்  இருக்கும். பண வரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். இன்று எதிர்பார்த்த பண வரவு தாமதமாக இருக்கலாம்.

அதை பற்றி எல்லாம் கவலை வேண்டாம் வந்து சேர்ந்துவிடும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய சூழலும் இருக்கும். இன்று பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்லக்கூடும். அடுத்தவர்களின் உதவியும் கிடைக்கும். இன்றைய நாள் மனம் மகிழ்ந்து கொள்ளக்கூடிய நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |