ஆம்புலன்ஸ் மூலம் வந்து வாக்கு செலுத்திய மூதாட்டியை பலர் பாராட்டியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கோவிந்தம்மாள் என்ற மூதாட்டிஉடல் நிலை சரி இல்லாததால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்களின் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து கோவிந்தம்மாள் தனதுவாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அதன் பின்னர் கோவிந்தம்மாள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் கோவிந்தமாளை பலர் பாராட்டியுள்ளனர்.