ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் முதல் முறையாக தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி கிராமத்தில் மகேஸ்வரன்- மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராமலட்சுமி, விஜயலட்சுமி, ராமகிருஷ்ணன், ஆகிய ஒரே பிரசவத்தில் பிறந்த பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3 பெரும் முதல்முறையாக சின்ன காரியாபட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது முதல் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தாங்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் தங்களது ஜனநாயக கடமையை செய்துள்ளோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.