மூன்று பிரபலங்களும் இணைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு திரைப்படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் Srinivasaa Silver Screen நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கி நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த ‘அகாண்டா’ திரைப்படம் பிரமாண்டமான ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து ராம் பொத்தினேனி தெலுங்கு மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்களின் இதயங்களை வென்று விடுவார் என்று திரையுலக வல்லுநர்களால் கணித்து நம்பப்படுகிறது.
இந்த மூன்று பிரபலங்களும் இணைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க உள்ளது திரைத் துறையில் மிகப் பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு விரைவில் பெயர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை மாஸ் கதையுடன் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவை ஈர்க்கும் வகையில் இயக்குநர் போயபதி ஸ்ரீனு எழுதியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.