மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் படம் அமையவில்லை. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தனது அடுத்த படத்திற்கான கதையை மிகவும் கவனமாக கேட்டு வந்தார்.
இந்நிலையில் இளம் இயக்குனரான நெல்சன் திலீப் குமாரின் கதை இவருக்குப் பிடித்துப்போனது. இதனால் தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். மேலும் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்படப்பிடிப்பானது மே மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு என்னவாயிற்று என பயந்தநிலையில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் உடல் நிலையை பரிசோதித்து கொள்ளும் நோக்கில் அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினி. சாதாரண உடல் பரிசோதனைக்காகத்தான் அமெரிக்கா சென்றுள்ளார் என்ற செய்தி வந்த பிறகுதான் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.