நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க வருவாரா? என்று எதிர்ப்பது காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தமிழ்நாட்டின் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கு நடிகர் விஜய் முதல் ஆளாக வந்து காலையிலேயே வாக்களித்துள்ளார். இவரைத் தொடர்ந்து கமலஹாசன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர். இவர்களைப் போலவே நடிகர் ரஜினியும் காலையிலே வாக்களிக்க வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தனது மகளின் குடும்ப பிரச்சினையால் வேதனையில் இருக்கும் அவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் ‘தலைவர் 169’ படத்தில் நடிகர் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி கலந்து கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். எப்பொழுதும் அதிகாலையே ஓட்டுப்போட வரும் ரஜினி மாலை வரையிலும் வாக்களிக்க வரவில்லை. இதைப்போலவே அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஓட்டு போடுவதற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.