மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி மூதாட்டி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை அடுத்து மூதாட்டியை தேடி வந்த அவரது மகன் சுப்பிரமணியன் கிணற்றில் தனது தாய் சடலமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.