ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் பாலகன் தெருவில் ஓட்டுனரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக சங்கரின் மனைவி அவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவாகரத்து கேட்டு சங்கரின் மனைவி நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.