அமெரிக்காவிலிருந்து வந்த மாணவி தனது வாக்கினை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையத்தில் இருக்கும் நடுநிலை பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் கல்லூரியில் படித்து வரும் மோனிகா என்பவர் ஈரோட்டில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அடுத்து மாணவி தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மாணவியின் பெயர் இல்லை. இது குறித்து மாணவி அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது அதிகாரிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்து உங்களது பெயர் இல்லை என்று மாணவியிடம் கூறியுள்ளனர். இதனால் தனது வாக்கினை செலுத்த முடியாமல் மாணவி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளார்.