இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் சேமலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மாணவி இருந்துள்ளார். இவர் கோவை சாலை பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலை அருகில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கோவை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் பழனியம்மாள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாளை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பழனியம்மாளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.