சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிதா தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிலிருந்து கீழே இறங்கி கவிதா உள்பட அனைவரும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி கவிதா மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.