Categories
சினிமா தமிழ் சினிமா

அடப்பாவமே….! தனுஷ் பயந்தது மாதிரியே நடந்துடுச்சே…. இனி அதுக்கு வாய்ப்பில….!!!!

நடிகர் தனுஷ் ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்று காத்திருந்த நிலையில் அவரின் கனவு நிறைவேறாமல் போனது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான பா.பாண்டி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று விரும்பினார் தனுஷ். ரஜினி கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படத்திற்கு பிறகு இரண்டு திரைப்படங்கள் நடித்துவிட்டு திரையுலகிற்கு விடை கொடுக்கிறார் ரஜனி. ரஜினியின் 169வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாயின. இதைத்தொடர்ந்து தலைவர் 170 திரைப்படத்தை தனுஷ் இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் தனுஷ் 170 திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருக்கின்றார். போனி கபூர் மற்றும் ராகுலிடம் ரஜினிக்காக நான் ஒரு கதையை வைத்து இருக்கிறேன் என அருண்ராஜ் காமராஜர் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் உடனே ரஜினியிடம் கதை சொல்ல அழைத்துச் சென்றுள்ளனர். அருண்ராஜா காமராஜ் ரஜினியிடம் கதை கூறியுள்ளார். ரஜினிக்கு கதை மிகவும் பிடித்துள்ளது. இதன் வாயிலாக ரஜினியை வைத்து இயக்கும் தனுஷின் கனவானது நிறைவேறாமல் போனது. முன்பாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்த உடனே தனுஷின் ஆசை நிறைவேறாது என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உண்மையாகியுள்ளது.

Categories

Tech |