Categories
மாநில செய்திகள்

கள்ள ஓட்டு போட்ட நபர்…. அரை நிர்வாணமாக அழைத்து செல்லும் வீடியோ…. பெரும் பரபரப்பு….!!!!

நேற்று (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை, ராயபுரம் பகுதியில் 49-வது வார்டுக்கான பூத்தில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி அரைநிர்வாணமாக ஒருவரை அழைத்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் அவரை பிடித்து சட்டையை கழற்றி, கையை கட்டி அழைத்து செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |