சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 61% வாக்குகள் பதிவாகி உள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 43.59% ஓட்டுகளே பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி தேர்தல் அடையாள மண்டலத்துக்கு உட்பட்ட ஓடைகுப்பம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தேர்தல் மாவட்ட அதிகாரி சுகன் தீப் சிங் பேடி விசாரணை நடத்தினார். இந்நிலையில் வாக்கு சாவடியில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் அப்பகுதியில் தேர்தல் நடத்தலாமா? அல்லது வேண்டாமா? என மாநில ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்பியுள்ளார். மேலும் இந்த அறிக்கை மீது விரைவில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டது தொடர்பாக தி.மு.கவை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.