தேர்தல் அதிகாரியிடம் தகராறு செய்த பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சி.கே மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடியில் திடிரென வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் கோபமடைந்த 12-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் தேர்தல் அதிகாரியான புவனேஸ்வரன் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
இதுகுறித்து புவனேஸ்வரன் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சுரேஷ் குமார் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.