Categories
மாநில செய்திகள்

சூப்பராக முடிந்த “உள்ளாட்சித் தேர்தல்”…. “பல கிலோ மீட்டர் தூரம் நடந்து”…. கெத்து காட்டிய “மலைவாழ் மக்கள்”….!!

உடுமலை அமராவதி வனச்சரகம் பகுதியிலுள்ள 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்காக வாட்ச் டவரில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு வந்து சுமார் 304 பேர் தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள்.

உடுமலை அமராவதி வனச்சரகம் பகுதியில் 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளது. இந்த மலை பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளி பேரூராட்சியில் மேல் குருமலை, பூச்சி கொட்டாம் பாறை, குருமலை ஆகிய மலைவாழ்மக்கள் குடியிருப்புகளை இணைத்து 16 ஆவது வார்டாக உருவாக்கப்பட்டு அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக குரு மலையிலுள்ள வனத்துறை வாட்ஸ் டவரில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுமார் 304 பேர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக பல கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதியில் நடந்து வந்து தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள்.

Categories

Tech |