Categories
உலக செய்திகள்

“நெருக்கடிக்கு தீர்வு காண” பேச்சுவார்த்தைக்கு வாங்க…. அழைப்பு விடுத்த உக்ரேன்…. புடினின் பதில் என்ன?…!!

ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கும் கிழக்கு உக்ரேனில் அந்நாட்டு ராணுவத்திற்குமிடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்கள் நாட்டுப் படைகளை குவித்து வருகிறது. இதனால் ரஷ்யா உக்ரேன் மீது எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதனை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள டன்ட்ஸ்க் மாநிலத்தில் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கும், அந்ராணுவத்திற்குமிடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக டன்ட்ஸ்க் மாநிலத்தில் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உக்ரைன் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் டன்ட்ஸ்க் மாநிலத்திலுள்ள லுஹான்ஸ்க் நகரில் அடுத்தடுத்து பயங்கர எரிவாயுக் குழாய் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் போர் பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்கா உக்ரேன் மீது படையெடுக்க ரஷ்யா வேண்டுமென்றே டன்ட்ஸ்க்கு மாநிலத்தில் பதற்றத்தை உருவாக்கி விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் கிழக்கு உக்ரேனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு வரும்படி அந்நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Categories

Tech |