Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “வாக்குவாதத்தை தவிருங்கள்”.. மனம் நிம்மதியாக காணப்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உங்களை புகழ்ந்து பேசி சொந்த காரியம் சாதிக்க முயற்சிகளை மேற்கொள்வார்கள். தொழில் வியாபாரம் அதிக உழைப்பால் வளர்ச்சியைக் கொடுக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். இன்று கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. உறவினர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதற்கு முன் ஆலோசனை செய்து கொள்வது ரொம்ப சிறப்பு. இன்றையநாள் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும்.

எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |