கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம்பெரும். ஆதாய பண வருமானம் கிடைக்கும். விரும்பும் பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவர பயண திட்டம் உருவாகும். இன்று செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். மன மகிழ்ச்சி உண்டாகும். உங்களை நாடி வருபவர்களை நன்கு உபசரித்து வேண்டிய உதவிகளையும் நீங்கள் செய்வீர்கள்.
பணத் தேவை ஓரளவு பூர்த்தியாகும். இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு சிறப்பாகவே வந்து சேரும். கவலை வேண்டாம் வாகன யோகம் இருக்கும். வாகனம் மூலமும் உங்களுக்கு லாபம் இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்