நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர்.
குமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்தது காலை 10 மணிக்கு முன்பாகவே மாற்றுத் திறனாளிகள் பலர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் மாற்றுத்திறனாளியான ஜான் என்பவரும், வெட்டூர்ணிமடம் பகுதியில் இருக்கும் பள்ளியில் மாற்றுத்திறனாளி தங்கராஜ் என்பவரும் வாக்களித்துள்ளனர்.
இதனையடுத்து வாய் பேச முடியாத, கை, கால் செயலழிந்த சசிகுமார், லீலாவதி, வனஜா, போன்ற பல மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க முடியாத முதியவர்கள் வாக்களிக்க வந்துள்ளனர். இவர்களை தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் மூன்று சக்கர தள்ளுவண்டியில் அமரவைத்து வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்துள்ளனர். இதேபோன்று பல மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளனர்.