தனுஷின் மனைவியான இயக்குனர் ஐஸ்வர்யாவை தனுஷ் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. கடந்த ஜனவரி 17 ஆம் தேதி இவர்கள் பிரிவதாக அறிவித்தனர். இதனால் ஐஸ்வர்யாவின் மீது ரஜினி கோபம் கொண்டார். தந்தையின் கோபத்தினால் ஐஸ்வர்யா தனுஷ் உடன் சேர்ந்து வாழலாம் என எண்ணினார். ஆனால் தனுஷ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஐஸ்வர்யா தனுஷ் எனக்கு வேண்டாம். நான் தனியாகவே இருந்து விடுகிறேன் என முடிவெடுத்து இருக்கின்றார். இவ்வாறு கூறினாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்குப் பின்னால் தனுஷின் பெயரை நீக்காமல் இருக்கின்றார் ஐஸ்வர்யா. இதைக் கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யாவை பாராட்டுகின்றனர்.
தனுஷுடன் சேர்ந்து வாழுங்கள், குழந்தைகள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என ரசிகர்கள் கூறி வருகின்றனர். தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா “முசாபிர்” என்கின்ற காதல் ஆல்பம் பாடலை இயக்கி இருக்கின்றார். இப்பாடலின் ட்ரெய்லரில் ஐஸ்வர்யா அவரின் பெயருக்குப் பின்னால் தனுஷின் பெயரைப் போடவில்லை. ஐஸ்வர்யாவுடன் தனுஷ் சேரவேண்டும் என விரும்புகின்றார் ரஜினி. ஆனால் தனுஷோ இனி நாங்கள் சேர்வதற்கு வாய்ப்பில்லை எனக் கூறுகின்றார் . தனுஷின் குடும்பத்தார்களும் தொடர்ந்து இவர்களை சேர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.