Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சான்றிதழ் ஏன் வரவில்லை….? அரசு ஊழியரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை கிராம நிர்வாக அலுவலகத்தில் அண்ணா துரை என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அண்ணாதுரை பணியில் இருந்த போது அதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட் ராஜ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வின்சன்ட் ராஜ் தான் ஜாதி சான்றிதழ் விண்ணப்பித்து நீண்ட நாட்களாகியும் ஏன் வரவில்லை எனக் கேட்டு அண்ணாதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் வின்சன்ட் ராஜ் அண்ணாதுரையை தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அண்ணாதுரை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வின்சென்ட் ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |