சாலையின் நடுவே ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மழுவன்சேரியில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு வனத்துறையினர் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.