வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து குற்றத்திற்காக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் 2-வது வார்டு ராம்குமார் என்பவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் பதிவான ஓட்டு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக ராம்குமாரிடம் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் வேட்பாளர் என்ற முறையில் ராம்குமார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று அதிகாரிகளிடம் வாக்கு பதிவு விவரங்களை கேட்டுள்ளார்.
அப்போது வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்கிற்கும் இயந்திரத்தில் பதிவான வாக்கிற்கும் ஒரு ஓட்டு வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ராம்குமார் கோபத்தில் இயந்திரம் பழுது அடைந்ததாக கூறி அதனைக் கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.