சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்துக்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாண்டியம்மாள் என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியம்மாளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.