Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…!!”புதிய வகை கொரோனா “… அடுத்த ஆபத்து… மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?….!!

தமிழகத்தில் தொற்று பரவும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா  தாக்கம் குறைந்ததன் காரணமாக கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றன. மேலும் இரவு நேர ஊரடங்குகளும்  ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் 21 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டத்தில் கொரோனா தடுப்பு  நடவடிக்கையை பின்பற்றவில்லை என புகார்கள் எழுந்துள்ளது.

இதன் காரணமாக வரும் நாட்கள் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பிரிட்டன் நாட்டில்”பிஏ 2″ வைரஸ்   கண்டறியப்பட்டுள்ளது. இது அதி வேகமாகப் பரவக் கூடியது எனவும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியது எனவும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த”பிஏ 2″  வைரஸ் தொற்று இந்தியாவுக்குள் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு  கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள் போன்றவை அமலாக  வாய்ப்புள்ளது. “பிஏ 2” வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தைப் பொருத்து இது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |