வடசென்னை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சிம்பு இணைத்து நடித்திருப்பார்களாம். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ்,சிம்பு ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த வரிசையில் தனுஷ்-சிம்பு இருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே சினிமாவை தவிர்த்து
நிஜ வாழ்விலும் வேலை நிமித்தமாக போட்டிருந்தது. தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்து போட்டியாக சிம்பு “மன்மதன்” திரைப்படத்தில் நடித்தார். மேலும் வெற்றியும் கண்டார். சிம்புவின் “குத்து, தம்” உள்ளிட்ட படங்களை பார்த்து தனுஷ் “திருடா திருடி” திரைப்படத்தில் நடித்தார். இருவருக்குள் ஆரம்ப காலத்திலிருந்தே பணி நிமிர்த்தமாக போட்டிகளில் இருந்து வருகின்றது.
வெற்றிமாறன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு உருவாகியிருந்த திரைப்படம் “வடசென்னை”. சில சந்தர்ப்ப சூழ்நிலையால் திரைப்படம் 2018ஆம் வருடம் தான் வெளியானது. இத்திரைப்படமானது முதலில் இரண்டு கதாநாயகர்களுக்கான கதையாக உருவானது. அதனால் தனுஷும் சிம்புவும் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் சிம்பு நடிக்கவில்லை. இதனால் வெற்றிமாறன், “ஆடுகளம்” திரைப்படத்தை கையில் எடுத்தார். பிறகு வடச்சென்னை கதையை ஒரு ஹீரோவுக்கான கதையாக மாற்றி தனுஷை ஹீரோவாக நடிக்க வைத்தார். இத்திரைப்படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் குறித்த தகவலை அறிந்த ரசிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ் இணைந்து நடித்திருந்தால் மாஸ்ஸாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.