தொழிலாளியை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணேஷ் தச்சநல்லூர் பஜாரில் நின்று கொண்டிருந்தபோது சத்திரம் பகுதியில் வசிக்கும் ஆனந்த் என்பவர் அரிவாளை காட்டி தொழிலாளியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து கணேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.