Categories
மாநில செய்திகள்

மாணவர்களே!…. தமிழகம் முழுவதும் இன்று (பிப்.21) பள்ளிகள் இயங்கும்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் (பிப்.19), ஞாயிற்றுக்கிழமையான நேற்று (பிப்.20), வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை (பிப்.22) மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றும் (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை தவிர மற்ற இடங்களில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வண்ணார்பேட்டை உருது பள்ளிக்கும், பென்சன்ட் நகர் அஷ்டலட்சுமி கார்டன் அரசு தொடக்கப்பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |