மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், ஜெர்மன் வெளியுறவு மந்திரியை சந்தித்து உக்ரைன் மற்றும் ஆப்கான் விவகாரங்கள் குறித்து பேசினார்.
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றார். ஜெய்சங்கர் மாநாட்டுக்கு இடையே பல நாடுகளில் உள்ள வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில் ஜெர்மன் வெளியுறவு மந்திரி அன்னலேனா பாயர்போக்கை சந்தித்து பேசினார். அப்பொழுது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது, உக்ரைன் போர் பதற்றம் மற்றும் ஆப்கான் விவகாரங்கள் குறித்து மந்திரிகள் ஜெய்சங்கர், அன்னலேனா பாயர்போக்கை இருவரும் விவாதித்தனர்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரிய மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பெர்க், சுலோவேனிய மந்திரி ஆன்சி லோகர், சவுதி அரேபிய மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத், ஈரான் மந்திரி அமிராப்தோல்லையன் மற்றும் பல்வேறு நாடுகளில் வெளியுறவு துறை மந்திரிகளை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்சங்கர் முனிச் பாதுகாப்பு மாநாட்டை முடித்துக்கொண்டு நேற்று பிரான்ஸ் சென்றார்.