எட்டு வயதான சிறுவன் ஒவ்வொரு வருடத்திற்கும் 4 அங்குலம் உயரம் என்ற அளவில் வளர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியாவின் மிக உயரமான பெண் என்ற பெருமையைப் பெற்ற ஸ்வெல்தனா சிங் உ.பி மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் வசிக்கிறார். தற்போது இவரது உயரம் 7 அடி 2 அங்குலம். இவரது கணவரை விட அதிகம் உயரம் கொண்டவர். மேலும் இவரது மகன் கரண் சிங் உலகின் அதிகமான உயரம் கொண்ட குழந்தை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கரன்சிங் பிறக்கும்போதே 2 அடி உயரமும், இரண்டரை வயது ஆகும் போது உயரம் 4 அடி 5 அங்குலம் என அசுர வளர்ச்சியை அடைந்துள்ளார். தற்போதைய நிலையில் எட்டு வயதான அவனுக்கு 6.6 அடியாக உயரம் அதிகரித்துள்ளது. அதாவது அவர் வயது குழந்தைகளை விட இரண்டு மடங்கு உயரமாக கரன் சிங் உள்ளார். இந்நிலையில் ஒவ்வொரு வருடத்துக்கும் 4 அங்குலம் என்ற அளவில் கரண்சிங் வளர்ந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.