Categories
மாநில செய்திகள்

மருத்துவ கல்லூரியில் சேர இன்றே கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 28-ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. மேலும் 30ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மருத்துவப் படிப்பு முதலாம் வருடம் மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று மருத்துவ கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா தொற்று தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டு, மருத்துவ கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.
அதுமட்டுமல்லாமல் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் பிப்.18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு அறிவித்திருந்தார். இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று(பிப்..21) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு வாயிலாக ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணியுடன் அவகாசம்  நிறைவடைகிறது.

Categories

Tech |