Categories
மாவட்ட செய்திகள்

பஸ்காக வெயிட்டிங்….. பயணி வெட்டி படுகொலை….. யார் இவர்…? மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

செங்கல்பட்டில் பேருந்திற்காக காத்திருந்த பயணியை மர்மநபர்கள் வெட்டி கொன்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள சிவானந்தா குருகுலம் எதிரில் அமைந்திருக்கக் கூடிய பேருந்து நிலையத்தில் அதிகாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

இதனை கண்ட இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பேருந்திற்காக காத்திருந்த சமயத்தில் இவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இவர் யார் எதற்காக வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் காவல்துறையினர்  தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |