Categories
சினிமா தமிழ் சினிமா

திரையுலகில் தொடர்ந்து அரங்கேறும் சோகம்….. “விஜய் சேதுபதி பட பிரபலம்”….. திடீர் மரணம்….!!!

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் லலிதானந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  

தமிழ் திரை உலகில் பிரபல பாடலாசிரியர் லலிதானந்த். இவர் தமிழில் பல்வேறு படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். ஜெய் நடிப்பில் வெளியான ‘அதே நேரம் அதே இடம்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். மேலும் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, மாநகரம், திருமணம், ஜூங்கா, அன்பிற்கினியாள் போன்ற பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பாடலாசிரியர் லலிதானந்த் நடிகர் கோகுல் சிம்புவை வைத்து தயாரிக்க உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் பாடல்கள் எழுதி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் சிறுநீரக செயலிழப்புக்காக டையாலிஸில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் லலிதானந்திற்கு முன்னரே  மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பாடலாசிரியர் லலிதானந்த்  காலமானார். இதை தொடர்ந்து நடிகை விஜய் சேதுபதி லலிதானந்தின் புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார் மேலும் பல திரையுலக பிரபலங்களும் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |