Categories
மாநில செய்திகள்

அனைத்து மொழிகளும் சமம்…. அப்படி ஒரு இந்தியாவைக் காண உறுதியேற்போம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

உலக தாய்மொழி தினமாக இன்று அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் இந்தியாவை காண உறுதியேற்போம் என்று முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக தாய்மொழி தினத்தில் தங்கள் மொழிகளை பாதுகாக்கவும் மற்றும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடியுள்ள தியாகிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது வணக்கத்தை செலுத்துவதாக கூறியுள்ளார்.

மேலும் அவர்களின் தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சியை கொண்டு ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் எனவும் அனைவருக்கும் சமமான இந்தியாவை காண நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்று அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது  வைரலாகி வருகிறது.

Categories

Tech |