Categories
உலக செய்திகள்

ஹாங்காங்கை புரட்டி போட்ட கொரோனா… படுக்கை பற்றாக்குறையால்… தத்தளிக்கும் நோயாளிகள்…!!!

ஹாங்காங்கில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் மருத்துவமனைகள்  நிரம்பி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காக்கில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையானது 6,000-த்தை  தாண்டியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனாவை எளிதில் கட்டுப்படுத்திய சீனா, இம்முறை அதிக பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. ஹாங்காங்கில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் 12,000 நபர்களுக்கு மட்டும் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

எனவே, ஹாங்காங் அரசு அறிகுறி இல்லாமல் லேசான பாதிப்பு உடைய நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தற்போது கொரோனா எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே, 10 ஆயிரம் நோயாளிகள் படுக்கைக்காக காத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு மெகா மருத்துவமனைகளை கட்டுவதற்கு ஆலோசனை நடக்கிறது. மேலும், ஹாங்காங் நகரில் இருக்கும் 75 லட்சம் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |