இதாகோ பொட்டேட்டோ கமிஷன் என்ற நிறுவனம் உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்ட வாசனை திரவியத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நிறுவனம் புதிதாக வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த வாசனை திரவியம் உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்டதாக வாசனை திரவியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாசனை திரவியத்தை அமெரிக்காவின் “இதாகோ பொட்டேட்டோ கமிஷன்” என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாசனை திரவியம் குறித்து அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய இதாகோ உருளைக்கிழங்கு ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் இந்த வாசனை திரவியத்திற்கு அந்நிறுவனம் பிரைட்ஸ் என்று பெயர் வைத்துள்ளது. இதனை தொடர்ந்து அந்நிறுவனம் இதாகோவின் பிரைட்ஸை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த “உருளைக்கிழங்கு சிப்ஸின் தவிர்க்க முடியாத வாசனை தயாரிப்பு ஒரு அற்புதமான நறுமணம் ஆகும். இந்த வாசனை திரவியம் உங்களுடையது இன்றே பெற்றிடுங்கள் குறைந்த அளவிலேயே உள்ளது” என்று விளம்பரம் செய்துள்ளது.