Categories
மாநில செய்திகள்

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு…..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். தற்போது மாணவி வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மாணவி லாவண்யா படித்த பள்ளியில் ஐஜி வித்தியா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழு இன்று விசாரணை நடத்த உள்ளனர். இதற்கிடையில் ஜாமினில் வெளியே வந்த விடுதி வார்டனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |