Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென தூங்கிய ஓட்டுநர்….. பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

தேர்தல் பணிக்கு சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் லாரி டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தமிழ்ச்செல்வன் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் இறக்கி வைத்துவிட்டு தமிழ்ச்செல்வன் நேற்று அதிகாலை உடுமலை நோக்கி புறப்பட்டுள்ளார். அவருடன் போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தமிழ்ச்செல்வன் லேசாக தூங்கியுள்ளார்.

இதனால் நிலைதடுமாறிய லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் காயமடைந்த தமிழ்ச்செல்வன் மற்றும் சுப்பிரமணியம் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |