Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் குடத்தில் சிக்கிய தலை…. சுவற்றில் மோதி சிரமப்பட்ட நாய்…. பொதுமக்களின் செயல்…!!

குடத்திற்குள் தலை சிக்கியதால் சிரமப்பட்ட நாயை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளலூர் சந்தைக்கடை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. இந்நிலையில் உடைந்த நிலையில் இருந்த பிளாஸ்டிக் குடத்திற்குள் தண்ணீர் உள்ளதா என்று பார்த்தபோது தெரு நாயின் தலை உள்ளே உள்ளே சிக்கிவிட்டது. இதனால் தலையை வெளியே எடுக்க முடியாமல் நாய் குறைத்துக்கொண்டே அங்குமிங்கும் சென்று சுவற்றில் மோதியுள்ளது.

இதனைப் பார்த்து பொதுமக்கள் பிளாஸ்டிக் குடத்தை லாவகமாக வெட்டியுள்ளனர். அதன் பிறகு நாயின் தலையை பத்திரமாக வெளியே எடுத்தனர். இதனையடுத்து நன்றியுடன் அந்த நாய் வாலை ஆட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றது.

Categories

Tech |