பஞ்சு வியாபாரியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் பஞ்சு வியாபாரியான ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஓட்டு போடுவதற்காக அருகில் இருக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு ஈஸ்வரமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை 5 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஈஸ்வரமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.