Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பிப்ரவரி 21, 22 ,23, 24 ஆகிய நான்கு நாட்கள்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் 21-ஆம் தேதி தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 22-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளர்.

மேலும் 23-ஆம் தேதி தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 24-ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் திருப்பூர், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார். சென்னையை பொறுத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்ப நிலை 22 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |