எலன் மஸ்கின் வழக்கறிஞர் பங்குச்சந்தை நிறுவன அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாகவும், மன உளைச்சலை தருவதாகவும் புகார் அளித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் எலன் மஸ்க்கும் ஒருவராவார். இவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர் ஆவார். இவர் தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 31,500 டாலர் தருவதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இவர் சொன்ன தொகையையும் கால தாமதத்துக்கான தொகையையும் எலன் மஸ்க் இதுவரை தரவில்லை. மேலும் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி தான். இதனால் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த பணத்தை பங்குதாரர்களுக்கு வாங்கிக் கொடுப்பது தொடர்பாக பங்குச்சந்தை நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் எலன் மஸ்க்கின் வழக்கறிஞர் சமீபத்தில் மான்ஹட்டன் மாவட்ட நீதிபதி அசலின் நாதனிடம் இந்த தொகையை வாங்குவதற்காக இலங்கை பங்குச்சந்தை நிறுவன அதிகாரிகள், அவரை துன்புறுத்துவதாகவும் தொடர்ந்து சம்மன் அனுப்பி மன உளைச்சலை தருவதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பங்கு சந்தை நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் இது சம்பந்தமாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஸ்டீவன் புச்சோல்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் “எலான் மஸ்க்கை துன்புறுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது” என குறிப்பிட்டுள்ளார்.