Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு ….!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 2 டெஸ்டு மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காயத்திலிருந்து மீண்டுள்ள ஜடேஜா மீண்டும் அணிக்கு  திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணிக்கெதிரான எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.தசுன் ஷானகா தலைமையிலான களமிறங்கும் இலங்கை அணியில் ரமேஷ் மெண்டிஸ், நுவன் துஷாரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இடம்பெறவில்லை.

இலங்கை அணி : தசுன் ஷனக (கேப்டன்), பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக, கமில் மிஷார, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, பிரவீன் ஜயவிக்ரம, அஷியன் டேனியல்.

Categories

Tech |