Categories
மாநில செய்திகள்

உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய தமிழக சிறுவன்…. குவியும் பாராட்டு…..!!!!!

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்னை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஏர்திங்ஸ் ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன்னை சந்தித்த அவர், 39-வது நகர்வில் வீழ்த்தி உலகின் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

15 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 8 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 8 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 12-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறுவனின் இந்த சாதனை அனைவருக்கும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |