Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சினிமா பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சினிமா பார்த்து கொண்டிருந்தபோது தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மதனபுரத்தில் கூலி தொழிலாளியான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தியேட்டரில் சினிமா பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சினிமா முடிந்த பிறகு தியேட்டரிலிருந்து அனைவரும் வெளியே வந்த பிறகு ஐயப்பன் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார்.இதனை பார்த்த தியேட்டர் ஊழியர்கள் ஐயப்பனை எழுப்ப முயற்சி செய்தபோது அவர் இறந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐயப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |