Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நள்ளிரவில் கேட்ட சத்தம் …. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீஸ் விசாரணை ….!!

மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடி சென்ற  2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆத்திபட்டி ஜெயராம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென   நாய்கள் குலைத்துள்ளது  . இதனை கேட்ட மாரிமுத்து வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் ஆடுகளை மோட்டார் சைக்கிளில் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாரிமுத்து தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்று ஆடுகளை திருடி சென்ற  மர்ம நபர்களை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |